இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா, மோரிஸ் கூட்டணி சாதனை
நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணி மோதியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்திலே தடுமாறி விளையாடியது . அதன் விளைவாக 40 ஓவரில் 7 விக்கெட்டை இழந்தது அதன் பின் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரபாடா, மோரிஸ் இருவரின் கூட்டணியில் 66 ரன்கள் குவித்தனர்.
இதற்கு முன் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியில் 7 விக்கெட்டை இழந்த பின் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த போஜ/க்ளுசெனீர் இவர்கள் கூட்டணியில் அடித்த 67 ரன்கள் முதல் இடத்தில் உள்ளது.அதற்க்கு அடுத்ததாக ரபாடா, மோரிஸ் இருவரின் கூட்டணியில் சேர்த்த 66 ரன்கள் உள்ளது.
67 – Boje/Klusener v WI 2003
66 – Rabada/Morris v IND 2019
57* Boucher/Klusener v ENG 1999
45* – Bouncher/Klusener v PAK 1999
43 – Pollock/Klusener v ZIM 1999