WT20: பந்து வீச்சில் மிரட்டிய ராதா யாதவ்.. சூப்பர் நோவாஸ் அணிக்கு 119 ரன் இலக்கு..!

பெண்களுக்கான டி20 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் முதலில் இறங்கிய டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தியான்ட்ரா , ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே நிதானமாக விளையாடி வந்த தியான்ட்ரா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்தார். இறுதியாக டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்தனர்.
118 ரன்கள் இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி களமிறங்க உள்ளது. ராதா யாதவ் 4 ஓவர் வீசி 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டை பறித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025