Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகியது.
டாஸ் இடும் பொழுது பேசிய ருதுராஜ் பேட்டிங் அணியில் மாற்றம் செய்துள்ளதாக கூறினார். அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா இடம்பெற வில்லை எனவும் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் அணியில் இடம்பெறாமல் இருந்த டேரில் மிட்செல் விளையாடுவார் என கூறினார்.
இது குறித்து பேசிய அவர், “வித்தியாசமாக எதுவும் தோணவில்லை, வழக்கம் போல டாஸ்ஸை இங்கே தோற்றுள்ளேன். இந்த மைத்தனத்தில் சற்று நேரம் கழித்து ஈரத்தன்மை ஏற்படலாம் ஆனால் விளையாடும் போது தான் நமக்கு தெரியும் இந்த பிட்ச் எப்படி நம்மை ஆச்சர்யபடுத்த போகிறது என்று. அதனால் நாங்கள் ரன்களை நோக்கி முன்னேற உள்ளோம், கிடைக்கின்ற பந்தை அடித்து விளையாட தயாராக இருக்கிறோம்.
எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் அமையும் என நம்புகிறேன். மேலும், ரவீந்திரா தனது ஃபார்மில் இல்லாததால் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுத்துள்ளோம். அதனால் அவருக்கு பதிலாக அணியில் டேரில் மிட்செல் இடம் பெற்றுள்ளார்”, என்று போட்டிக்கு முன் டாஸ்ஸின் போது ருதுராஜ் கூறி இருந்தார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…