மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் வரலாற்று சாதனையை முறியடித்த ரச்சின்..!
ஒருநாள் உலகக்கோப்பையில் நேற்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் அணியின் நியூசிலாந்து இளம் பேட்ஸ்மேன் ரச்சின் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். ரச்சின் ரவீந்திரன் நியூசிலாந்திற்காக முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுகிறார். அவருடைய வயது 25 க்கும் குறைவாக உள்ளது. 25 வயதில் ரச்சின் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின்:
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரச்சின் பின்னுக்கு தள்ளியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1996 உலகக் கோப்பையில் விளையாடியபோது அவருக்கு 25 வயதிற்கு குறைவாக இருந்தது. அந்த உலகக் கோப்பையில் அவர் 523 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். நடப்பு உலகக்கோப்பையில் ரச்சின் ரவீந்திரா தற்போது இந்த சாதனையை தன் பெயரில் வைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரச்சின் ரவீந்திரா 42 ரன்கள் எடுத்தார். இதனால், நடப்பு போட்டியில் ரச்சின் ரவீந்திரா 565 ரன்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் இலங்கை அணிக்காக பேட்டிங் செய்த குசல் பெரேரா அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பாக களமிறங்கிய கான்வே 45 ரன்களையும், ரச்சின் ரவீந்திரன் 42 ரன்களையும், டெரில் மிட்செல் 43 ரன்களையும் அடித்தனர்.