ஐபிஎல் போட்டியில் அதிவிரைவாக 50 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை ரபடா சாதித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைபெற்று வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியும் டெல்லியும் மோதியது.
பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்த போது டெல்லி வீரர் ரபடா பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவ்விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை கைப்பற்ற ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரபடா தனதாக்கி கொண்டார்.
இச்சாதனையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் 32 போட்டிகளில் 50 விக்கெட் எடுத்தார். அதே போல மும்பை அணி வீரர் லசித் மலிங்கா 33 போட்டிகளில் 50 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
மேலும் சென்னை வீரர் இம்ரான் தாஹிர் 35 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தினார்.இவர்களின் சாதனைகளை எல்லாம் ரபடா தனது 27 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
ரபடா தொடர்ந்து 23 போட்டியில் இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…