கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் போது நடைபெற்ற சம்பவங்களை இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் அண்மையில் பகிர்ந்துள்ளார்.
2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடியது. நடைபெற்ற மூன்று டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 590 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 482 ரன்கள் எடுத்திருந்தது. அந்த போட்டியில், இந்திய அணி சார்பாக ரவிசந்திரன் அஸ்வின் 100 ரன்களை கடந்து 103ரன்களை எடுத்திருந்தார்.
அடுத்து, 2-வது இன்னிங்சில் ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்களுக்கு ஆட்டம் இழக்க உறுதுணையாக செயல்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் தான் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியும் சற்று தடுமாறியது.
அந்த சமயம் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் ஆரோனும் இருந்துள்ளனர். அப்போது ரவிசந்திரன் அஸ்வின் 2 ரன்களுடன் முற்பட்டு ஓடிவந்துருந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அஸ்வினை ரன் அவுட் செய்துவிட்டனர்.
இதன் காரணமாக, அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி டிரா செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாகவும், டெஸ்ட் தொடரில் தொடர் நாயகனாகவும் ரவிசந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டி குறித்து ரவிசந்திரன் அஸ்வின் அண்மையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மஜர் அர்ஷாத் உடன் யூடியூபில் தெரிவிக்கையில், ‘மூன்றாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்க்ஸ் முடிந்த பிறகு எம்.எஸ்.தோனி தன்னிடம் வந்து 2 ரன்களை எடுக்க முற்பட்டு இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு ரன் எடுத்து விட்டு கடைசி பந்தை வருண் ஆரோன் சந்திக்க விட்டு இருந்தால், அவர் ஒரு ரன் எடுத்து இருந்திருப்பார்.’ என தோனி குறிப்பிட்டதாக, அஸ்வின் யூடியூபில் கூறியிருந்தார்.
ஒரு வேளை அப்படி செய்திருந்தால் அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்கிற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை ஒயிட் வாஷ் செய்திருக்கும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…