மயங்க் யாதவ் பந்து வீச சொன்னா ராக்கெட் வீசுகிறார்! புகழ்ந்து தள்ளிய குயின்டன் டி காக்!

quinton de kock speech

ஐபிஎல் 2024 :மயங்க் யாதவ் வேகப்பந்து வீச சொன்னால் ராக்கெட் வீசுகிறார் என குயின்டன் டி காக்  தெரிவித்துள்ளார்.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மயங்க் யாதவ், குயின்டன் டி காக் இருவரும் தனியாக தெரிந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இவர்களுடைய பங்களிப்பும் லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் லக்னோவின் தொடக்கட்ட ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 56 பந்துகளில் 81ரன்கள்  எடுத்து. டி காக்கின் அதிரடி ஆட்டம் காரணமாக தான் லக்னோ அணி 181 ரன்கள் அடித்தது. அதைப்போலவே பந்துவீச்சை பொறுத்தவரையில், லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் 4 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார். எனவே, தான் மயங்க் யாதவ், குயின்டன் டி காக் இருவரும் தனியாக தெரிந்தார்கள்.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய குயின்டன் டி காக் வெற்றிபெற்றது குறித்தும் மயங்க் யாதவ் குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இந்த மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம் எனவே என்னால் ரன்கள் அடிக்க முடிந்தது. முதலில் எங்களுடைய அணி 180 ரன்கள் அடித்த போது இந்த ரன்கள் போதுமா? என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால், பந்து நன்றாகவே பேட்டிற்கு வந்தது எனவே திரும்பி இந்த டார்கெட் பெங்களூர் அணி அடித்துவிடுவோமோ என்று நினைத்தேன். எனக்கு இந்த போட்டி மிகவும் பிடித்திருந்தது என்னால் விருப்பப்படி மிகவும் சுதந்திரமாக விளையாட முடிந்தது” என குயின்டன் டி காக் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மயங்க யாதவ் குறித்து பேசிய குயின்டன் டி காக் ” எங்களுடைய அணியில் மயங்க யாதவ்  இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் வேகமாக பந்து வீச சொன்னால் ராக்கெட்டுகளை வீசுகிறார். அந்த அளவிற்கு அவருடைய பந்து மிகவும் வேகமாக இருக்கிறது. அவரை போல இளம் பந்துவீச்சாளர்கள் இளைஞர்களுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கிறார். அவர் வீசும் பந்து விதம் எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” எனவும் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்