#SAvsIND: சதம் விளாசினார் தென்னாப்ரிக்காவின் குயின்டன் டிகாக்..!
இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் தென்னாப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக்.
இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஏற்கனவே, ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி கடைசி போட்டியிலும் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று முனைப்பில், இன்று டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான குயின்டன் டி காக், ஜனனிமான் மாலன் களம் கண்டனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மாலன் ஒரு ரன் மட்டுமே எடுத்து தீபக் சாஹர் பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய கேப்டன் தேம்பா பாவுமா ரன் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் வந்த ஐடன் மார்க்ராம் விக்கெட்டை இழக்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 31-வது ஓவரிலேயே 110 பந்துகளில் 102 ரன்கள் அடித்து தனது சத்தத்தை பூர்த்தி செய்து விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் குவின்டன் டி காக்கு 17-வது சதம் இதுவாகும்.
இந்தியாவுக்கு எதிராக ஆறாவது சதம் இதுதான். 35 சதவிகித சதங்களை இந்தியாவுக்கு எதிராக மட்டும் அடித்திருக்கிறார். தற்போது தென்னைப்பிரிக்கா அணி 36 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்து விளையாடு வருகிறது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்து பும்ரா பந்தில் அவுட்டானார்.