கொல்கத்தா பந்து வீச்சில் தடுமாறிய பஞ்சாப்.., 124 ரன்கள் இலக்கு..!
பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்தனர்
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
முதலில் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் 19 ரன்னில் சுனில் நரைனிடம் விக்கெட்டை கொடுத்தார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் டக் அவுட் ஆனார். தீபக் ஹூடா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 31 இருக்கும் போது சுனில் நரைன் ஓவரில் ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் மத்தியில் இறங்கிய கிறிஸ் ஜோர்டான் 30 ரன்கள் எடுக்க அடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்தனர்.
124 கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணா 3 , பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.