காட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்… 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..!

ஐபிஎல் டி20 தொடரின் 9-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர், இருவரும் அதிரடியாக விளையாட அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதம் விளாசி 106 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், அடுத்த சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் 69 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய மேக்ஸ்வெல் 13, நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் குவித்தனர். 224 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025