ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.
போட்டி தொடக்கத்திலே கே.எல்.ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து அதிரடி வீரர் கிறிஸ் கெயில் களமிறங்கினார். மத்தியில் ஆடிவந்த மயங்க் அகர்வால் 22 ரன்கள் அடித்து வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய பூரன், ஒரு பந்து கூட ஆடாமல் ரன்-அவுட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கெயில் 17 ரன்கள் அடித்து மைதானத்தை விட்டு வெளியேற, அதனைதொடர்ந்து விக்கெட்கள் மளமளவென விழுந்தது.
இறுதியாக ஷாருக்கான் 22 ரன்கள் அடிக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். பஞ்சாப் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் கலீல் அஹமத் தலா 3 விக்கெட்களையும், அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…