ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராபின் உத்தப்பா – ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்கள்.
தொடக்கத்திலே ருத்ராஜ் கெய்க்வாட் 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த ராபின் உத்தப்பா 13 ரன்கள் அடித்து வெளியேறினார்கள். பின்னர் களமிறங்கிய மொயின் அலி டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவும் ஒரு ரன் கூட அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். 13 ரன்கள் மட்டுமே அடித்து அம்பதி ராயுடு தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து சிவம் துபே – தோனி களமிறங்கினார்கள்.
இவர்கள் கூட்டணியில் அணியின் ஸ்கொர் அதிகரிக்க, 57 ரன்கள் அடித்து சிவம் துபே தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிராவோ, பெடோடிரியஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 18 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே அடித்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை சந்தித்த சென்னை அணி, இந்த போட்டியில் வெற்றிபெறுவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தனது ஹட்-ட்ரிக் தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்தது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…