குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

RCB vs PBKS - IPL 2025

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியானது வழக்கமான இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவில்லை. மழை குறுக்கிட்டதன் காரணமாக 20 ஓவர்கள் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இரவு 9 மணிக்கு மழை குறைந்த பிறகு மைதானம் தயார் செய்யப்பட்டு இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கியது.  இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். முதலில் விளையாடிய பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 5 பவுண்டரி கள் , 3 சிக்ஸர்கள் விளாசி 50 ரன்கள் எடுத்தார். அதன் காரணமாகவே RCB அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4),ஜிதேஷ் சர்மா (2), க்ருனால் பாண்டியா (1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் படிதார் 23 ரன்கள் அடித்தார்.  இறுதியில், பெங்களூரு 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 95 ரன்கள் மட்டுமே குவித்தது.

14 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. பிரியன்ஸ் ஆர்யா (16 ரன்கள்), ப்ராப்சிம்ரன் சிங் (13 ரன்கள்), கேப்டன் ஷ்ரேயஸ் (7 ரன்கள்), ஜோஸ் இங்கிலிஷ் (14 ரன்கள்) என குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேறினர். நேஹால் வதேரா இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து  RCB அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தங்கள் சொந்த மைதானமான சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.  குஜராத், டெல்லி அணியை அடுத்து பஞ்சாப் அணியிடமும் தோல்வி கண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்