தமிழக வீரர் ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது.
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்தாக் அலி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஷாருக்கானுக்கு மசுவு அதிகரித்துள்ளது.