சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது.
இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் ருதுராஜ் 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 2 பவுண்டரி அடித்து 12 ரன்னில் பிஷ்னோயிடம் போல்ட் ஆனார்.
பின்னர், ஜடேஜா, ஃபாஃப் டு ப்ளெஸிஸ் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய ஃபாஃப் டு ப்ளெஸிஸ் அரைசதம் விளாசி 76 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் கே.எல் ராகுலிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழக்க, இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் , ஷமி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…