பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 46, கே.எல் ராகுல் 91* ரன் எடுத்தனர். 180 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியில் தொடக்க வீரராக விராட் கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே படிக்கல் 7 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் ரஜத் பட்டீதர் களமிறங்கினார். விராட் கோலியுடன் இணைந்த ரஜத் பட்டீதர் அணியின் எண்ணிக்கையை சற்று உயரத்தினர். நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 35 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். இதனால் பெங்களூர் அணி 62 ரன்னில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்னில் கேஎல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஏபி டிவில்லியர்ஸ் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஜத் பட்டீதர் 31 ரன்களில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கடைசியில் இறங்கிய ஹர்ஷல் படேல் 12 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 31 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பஞ்சாப் அணியில் ஹர்பிரீத் ப்ரா 3, ரவி விஷ்யா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணி இதுவரை தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் பெங்களூர் அணி 5 போட்டிகள் வெற்றியும், 2 போட்டியில் தழுவி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி மூன்று போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தழுவி 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…