ஐபிஎல் 2024 : மாயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் ..!! முதல் வெற்றியில் பாதம் பதித்த லக்னோ ..!

LSG Won [file image ]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

லக்னோ அணியில் மிகப்பெரிய மாற்றமாக கே.எல்.ராகுலை இம்பாக்ட் வீரராக விளையாட வைத்து, கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட வைத்தனர். இதனால் பேட்டிங் செய்ய மட்டும் களமிறங்கிய கே.எல்.ராகுல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு தொடக்க  வீரராக களமிறங்கிய டிகாக் அதிரடி காட்ட, ஒரு முனையில் பூரனும் அதிரடி காட்ட லக்னோ அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

இவர்கள் இருவரும் நல்ல ஒரு கூட்டணியில் விளையாடி டிகாக் 54 ரன்களும், பூரன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து இறுதியில் களம்  கண்ட குருனால் பாண்டியாவின் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவருக்கு 199 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய குருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், பேர்ஸ்ட்ரோவும் களமிறங்கினர்.

லக்னோ அணியின் பந்து வீச்சாளராகளை, ஷிகர் தவான் சொல்லி சொல்லி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்து பறக்க விட்டார் அதிரடி காட்டினார். இதனால் பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்தது. மேலும், முதல் விக்கெட்டை எடுக்கும் முயற்சியில் லக்னோ அணி தீவிரமாக ஈடுபட்டது. ஆனாலும், பஞ்சாப் தொடக்க வீரர்களின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் வீரர்கள் இருவரும் அவர்களது கூட்டணியில் 102 ரன்களில் இருக்கையில், பேர்ஸ்ட்ரோ 42 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதனை தொடர்ந்து இம்பாக்ட் வீரராக களமிறங்கிய பிரேம்சிம்ரனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். நன்றாக தொடங்கிய பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் மெதுவாக வெற்றியை நழுவ தொடங்கியது.

பஞ்சாப் அணியில் தனி ஒரு ஆளாக நின்று போராடி கொண்டிருந்த தவானும் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அவரை தொடர்ந்து அடுத்த பந்துலேயே சாம் கர்ரனும் தொடர்ந்து ஆட்டமிழக்க, லக்னோ அணியின் வெற்றி உறுதி ஆனது. அதனை தொடர்ந்து களத்தில் லிவிங்ஸ்டனும், ஷஷாங்கும் இறுதி வரை போராடியும் இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.

இறுதியில், 20 ஓவருக்கு லக்னோ அணி 5 விக்கெட் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணியில் மிகச்சிறப்பாக உச்சகட்ட வேகத்தில் பந்து வீசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய மயங்க யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பஞ்சாப் அணியில் ஷிகர் தவானை தவிர யாரும் சரி வர ஆடவில்லை. இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்