சம்பளத்தில் ஒரு பகுதியை மருத்துவ உதவிக்காக கொடுத்த நிக்கோலஸ் பூரன்..!!
இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக நிக்கோலஸ் பூரன் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை நிதியுதவி கொடுத்துள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. பலர் கிரிக்கெட் வீரர்கள் மருத்துவ உதவிகளுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன், ஐபிஎல் தொடரின் மூலம் தனக்கு கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக கொடுப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Although many other countries are still being affected by the pandemic, the situation in India right now is particularly severe. I will do my part to bring awareness and financial assistance to this dire situation.#PrayForIndia pic.twitter.com/xAnXrwMVTu
— nicholas pooran #29 (@nicholas_47) April 30, 2021
இதுகுறித்து ட்வீட்டரில் அவர் கூறியிருப்பது ” இன்னும் பல நாடுகள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், குறிப்பாகஇப்போது இந்தியாவில் நிலைமை கடுமையானது. இந்த மோசமான சூழ்நிலைக்கு விழிப்புணர்வு மற்றும் நிதி உதவிகளைக் கொண்டுவருவதற்கு நான் எனது பங்கைச் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பேட் கம்மின்ஸ், பிரட் லீ, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் தங்களது முடிந்த நிதியுதவிகளை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.