இதுதான் தோல்விக்கு காரணம்! பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறியது என்ன?

Shikhar Dhawan

Shikhar Dhawan: பெங்களூருவுக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்தார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதின. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை பஞ்சாப் அணி எடுத்து. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்திருந்தார்.

பெங்களூர் அணி சார்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 77 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

இப்போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது,  இது ஒரு நல்ல போட்டி. எங்கள் பக்கம் இருந்த வெற்றியை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம். பவர் பிளே ஓவர்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இதில் குறிப்பாக எங்கள் பேட்டிங்கின்போது முதல் 6 ஓவரில் நான் மெதுவாக விளையாடினேன்.

அதுமட்டுமில்லாமல், முதல் ஓவரிலேயே விராட் கோலி போன்ற வீரருக்கு கேட்ச் தவறவிட்டுவிட்டோம். ஒரு கிளாஸ் பிளேயரின் கேட்சை தவறவிட்டதால், அதற்கான விலையை நாங்கள் கொடுக்க வேண்டும். இதனால் ஆட்டம் சிறப்பாக அவர்கள் பக்கம் மாறியது. அந்த அந்த கேட்சை பிடித்திருந்தால், எங்களுக்கு உத்வேகம் கிடைத்திருக்கும், அதுமட்டுமல்லால் எங்கள் பக்கம் வெற்றி இருந்திருக்கும்.

அதேபோல், இந்த பிட்ச் 70 சதவிகிதம் நன்றாக பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. அப்படி இருந்தும், போட்டியை நாங்கள் கடைசி ஓவர் வரை எடுத்து வந்தோம். இருப்பினும், நாங்கள் கடைசி 2 ஓவர்களை கொஞ்சம் கவனமாக வீசியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்