சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!
ஐபிஎல் மெகா ஏலம் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் அணி யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு வாங்கியது.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டி தூக்கி வருகிறது.
இந்நிலையில், பெயரில் மட்டும் கிங்ஸ் என்பதை வைத்துக்கொள்ளாமல் ஏலத்திலும் நாங்கள் கிங் என்பதை நிரூபிக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்களை ஏலத்தில் தட்டித்தூக்கியுள்ளது. முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இரண்டாவதாக ஷ்ரேயாஸ் ஐயரை 26 கோடி75 லட்சம் கொடுத்து எடுத்தது. மூன்றாவதாக யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. யுஸ்வேந்திர சாஹல் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுக்க முன் வந்தது.
சென்னை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூட அடுத்ததாக யுஸ்வேந்திர சாஹல் தான் என கூறி சென்னை ஜெர்சி அணிந்து அவர் தங்களுடைய அணிக்கு வரவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருந்தது. ஆனால், 2 கோடியில் தொடங்கிய யுஸ்வேந்திர சாஹல் இறுதியாக 18 கோடி வரை சென்று நின்றார்.
தொகை அதிகமாக இருந்த காரணத்தால் யுஸ்வேந்திர சாஹலை எடுக்கும் யோசனையில் இருந்து சென்னை அணி பின் வாங்கியது. அதன்பிறகு கொல்கத்தா அணி பஞ்சாப் அணி ஏலத்தில் அவருக்கு போட்டி போட்ட நிலையில், 18 கோடி கொடுத்து யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் ஏலத்தில் எடுத்தது. யுஸ்வேந்திர சாஹல் நம்மளுடைய அணிக்கு வருவார் என சென்னை அணி நிர்வாகம் எதிர்பார்த்த நிலையில் இது சென்னை அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.