IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக மத்தியில் களம் இறங்கிய ரியான் பராக் 48 ரன்களும், அஸ்வின் 28 ரண்களும் எடுத்தனர். அதே நேரத்தில் பஞ்சாப் அணியில் சாம்கரண் , ஹர்ஷல் படேல் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் இருவரும் தலா ஒரு விக்கெட் பறித்தனர். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் 4-வது பந்தியிலேயே பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களுக்கு விக்கெட் இழந்தார். அடுத்து ரிலீ ரோசோவ் களமிறங்க நிதானமாக விளையாடி 22 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷஷாங்க் சிங் டக் அவுட் ஆகி நடையை காட்டினார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவ் 22 பந்தில் வெறும் 14 ரன் எடுத்து விக்கெட் இழந்தார்.
பின்னர் சரிவில் இருந்த அணியை ஜிதேஷ் சர்மா, சாம் கரண் இருவரும் நிதானமாக விளையாடி மீட்டு கொண்டு வந்தனர். இருப்பினும் இவர்களின் கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை 22 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடிக்க முயன்ற ஜிதேஷ் சர்மா யுஸ்வேந்திர சாஹலிடம் தனது கேட்சை கொடுத்தார். இருந்தபோதிலும் கேப்டன் சாம் கரண் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 13 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.
ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியை ஏற்கனவே இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…