ஐபிஎல் 2024 : குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப்  அணிகள் மோதியது. இந்த போட்டி  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில்  48 பந்தில் 89* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதே நேரத்தில் சாய் சுதர்சன் 33 ரன்களும், கேன் வில்லியம்சன் 26 ரன்களும், ராகுல் தெவாடியா 23* ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியில் ரபாடா 2 விக்கெட்டையும்,  ஹர்பிரீத் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப்  அணிக்கு  தொடக்கமே எதிர்பார்த்த அளவிற்கு  அமையவில்லை, காரணம் கேப்டனும், தொடக்க வீரருமான ஷிகர் தவான் 2 ஓவரின் முதல் பந்தில் போல்ட் ஆகி  1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  பின்னர் பிரப்சிம்ரன் சிங் களமிறங்க மறுபுறம் இருந்த ஜானி பேர்ஸ்டோவ்  சற்று அடித்து விளையாடினார்.

ஆனால் அது நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை 6-வது ஓவர் வீசிய நூர் அகமது பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் போல்ட் ஆகி 22 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து சாம் கரண் களமிறங்க ஏற்கனவே களத்தில் இருந்த பிரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தபோது மோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்த சில நிமிடங்களில் சாம் கரண் 5 ரன் எடுத்து நடையை கட்டினார். இதனால் பஞ்சாப் அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷஷாங்க் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 61* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 19.5 ஓவரில்  7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் நூர் அகமது 2 விக்கெட்டையும்,  உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

பஞ்சாப்  மற்றும் குஜராத் அணி தலா  4 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டியில் தோல்வியையும் பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

7 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

37 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

1 hour ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

9 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

10 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

11 hours ago