#image_title
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்தபோட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டைகளை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 29 ரன்களும் எடுத்தனர். இதற்கிடையில் மத்தியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி 21 ரன்கள் எடுத்தார். 163 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.
இதில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் நான்காவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரிலீ ரோசோவ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓவர் வீசிய சிவம் துபே தனது முதல் ஓவரிலே சிறப்பாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடிக்காமல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ஷஷாங்க் சிங் களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் சிறப்பாக விளையாடி வந்த ரிலீ ரோசோவ் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் போல்ட் ஆகி 43 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் சாம் கரண், ஷஷாங்க் சிங் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியாக பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கடைசிவரை களத்தில் சாம் கரண் 27* ரன்களுடனும் , ஷஷாங்க் சிங் 25* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை இதுவரை பத்து போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஐந்து போட்டியில் வெற்றியும், ஐந்து போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 10 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…