ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி…. பும்ரா….!
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மும்பை இந்தியனஸ் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் ஜஸ்பிரித் பும்ரா கூறியது, ரோஹித் சர்மா மிகவும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், எந்த ஒரு சூழலிலும் மிகவும் அமைதியாக இருப்பார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் தான் வழிகாட்டி அவரிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம்.
மேலும் ரோஹித் சர்மா அணுகுமுறையால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் அவர் கையில் எடுத்துக்கொண்ட விஷயங்களை மிகவும் மிகவும் தீவிரமாக கையாளுவர் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் அதிகமாக தன்னம்பிக்கைகளும் தருகிறது. ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடுவதால் அதிமான சுதந்திரம் கிடைக்கும், நங்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது எங்களிடம் அவர் உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்துங்கள் என்று கூறுவார்.