புல்வாமா தாக்குதல் எதிரொலி!!அதிரடியாக நீக்கப்பட்ட பாகிஸ்தான் புகைப்படங்கள்!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.இந்நிலையில் பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான புகைப்படங்களை நீக்கியுள்ளது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகைப்படங்கள் பல புகைப்படங்களை நீக்கியுள்ளது.