புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் விளாசினார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுகு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆனால் இருவரும் நிலைத்து நிற்கவில்லை சுப்மான் கில் 29, ரோஹித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்.
இதனால், இந்திய அணி பரிதாபமான நிலை இருந்தபோது, புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அதிரடியாக விளையாடி வரும் இருவரும் அரைசதம் விளாசினார். பண்ட் 54 பந்தில் 63* ரன்கள் எடுத்த்துள்ளார். அதில், 6 பவுண்டரி , 4 சிக்ஸர் அடங்கும். டெஸ்ட் போட்டியில் பண்ட்டின் இது 5-வது அரைசதமாகும்.
புஜாரா 117 பந்தில் 57* ரன்கள் எடுத்துள்ளார். அதில் 8 பவுண்டரி அடங்கும். டெஸ்ட் போட்டியில் புஜாராவின் இது 29-வது அரைசதமாகும். இங்கிலாந்து அணியில் டொமினிக் பெஸ், ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இந்திய அணி தற்போது 4 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…