INDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா !
இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி 20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 , ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வருகின்ற 22-ம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது.கேப்டன் கோலிக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.இதனால் கேப்டன் பெறுப்பை ரஹானே ஏற்று உள்ளார்.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் ,
லோகேஷ் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 , லோகேஷ் ராகுல் 36 ரன்னிலும் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய ரஹானே 1 ரன்னில் வெளியேறினர்.இதை தொடர்ந்து நிலைத்து நின்ற ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.சிறப்பாக விளையாடிய ரோஹித் 68 ரன்கள் குவித்தார்.
நிதானமாக விளையாடிய புஜாரா சதம் விளாசினார்.பின்னர் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினர்.நேற்றைய ஆட்டமுடிவில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் குவித்தனர். களத்தில் விஹரி , ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.