இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி விலகினார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து வரும் 17 ஆம் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது.
தற்பொழுது இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை அடித்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி, 306 ரன்கள் குவித்தது. 59 ரன்கள் பின் தங்கிய இந்தியா ஏ அணி, 189 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து தனது 2ஆம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி ட்ராவில் முடிந்தது. இந்தநிலையில், இந்த போட்டியில் கார்த்திக் தியாகி வீசிய பந்து, மறுமுனையில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த புகோவ்ஸ்கி ஹெல்மட்டில்பட்ட காரணத்தினால், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகினார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…