இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் குறித்துதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசிக்கொண்டு இருக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் வருகிறது. இந்த தொடருக்கான தங்களது அணி வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, இந்தாண்டு உலக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 .19 கோடி (4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதுபோன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடையும் (இரண்டாவது) அணிக்கு சுமார் ரூ.16.50 கோடி ( 2 லட்சம் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்படவுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்கும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும், உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு தலா ரூ.33 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…