உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிப்பு… தோற்கும் அணிக்கும் பல கோடி..!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்காக ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடி இருக்கும். தோல்வியடையும் அணிக்கு வழங்கப்படும் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் இருக்கும். அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கும் தலா 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 6 கோடி) வழங்கப்படும்.

அரையிறுதிக்கு சென்ற 4 அணிகளுக்கு தலா 1 லட்சம் டாலர்கள் (83 லட்சம்) வழங்கப்படும். லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர்கள் (33 லட்சம்) வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. லீக்கில் 9 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, லீக் போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் டாலர்கள் அதாவது (33 லட்சம்) கிடைக்கும். அதேபோல அரையிறுதிக்கு சென்றதால் அதற்காக 83 லட்சம் பரிசாக வழங்கப்படும். இதை வைத்து பார்க்கும்போது இந்திய அணிக்கு தற்போது வரை 3 கோடியே 79 லட்சம் பரிசு தொகையை தங்களின் கையில் வைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் கனவாக உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி ரசிகர்களின் கனவை நிஜமாக்குமா..? இந்திய அணி பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்