இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். இப்போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவரது இடது கால் கீழ் காயம் ஏற்பட்டது.
அதேபோல ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது வலது கை பந்துவீச்சு விரலில் காயம் ஏற்பட்டது. பின்னர், பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் கொரோனாவில் இருந்து மீண்டு பி.சி.சி.ஐ மருத்துவக் குழு அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்திய அணியில் இணைந்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் பி.அருண், விருத்திமான் சஹா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில், இந்தியா அணியில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், காயம் காரணமாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் , அவேஷ் கான் விலகியுள்ள நிலையில் புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் ஆட்டநாயகன் விருதை சூரியகுமார் யாதவ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அணி:
ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷார்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…