இன்றைய போட்டியில் ரோஹித் சர்மாவை பந்தால் அடித்த பிருத்வி ஷா.. வைரல் வீடியோ ..!
இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா மீது பிருத்வி ஷா பந்தால் அடித்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 274 ரன்கள் எடுத்து உள்ளனர். இன்றைய போட்டியில் இரண்டாவது session தொடங்கியபோது சைனிக்கு சிறிய காயம் காரணமாக மைத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
மேலும், அவருக்கு பதிலாக களத்தில் பிருத்வி ஷா நியமிக்கப்பட்டார். இந்த தொடரில், பிருத்வி ஷாவுக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், சைனிக்கு பதிலாக பீல்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், பீல்டிங் செய்யும்போது பிருத்வி ஷா விக்கெட்டை குறிவைப்பதற்கு பதிலாக, தற்செயலாக சீனியர் வீரர் ரோஹித் சர்மாவை பந்தால் அடித்தார். ரோஹித் மீது பிருத்வி தாக்கிய அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
Prithvi Shaw needs to calm a bit. ???? pic.twitter.com/ikJM1FCCAc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 15, 2021
கடைசி வினாடியில் பந்தைப் பார்த்த ரோஹித்:
பிருத்வி ஷா வீசிய பந்து கடைசி வினாடியில் புல்லட்டின் வேகத்தில் பந்து தன்னை நோக்கி வருவதை கண்ட ரோஹித், அதை தனது கையால் நிறுத்தினார். இதனால், ரோஹித் ஷர்மாவிற்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.