ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசி சாதனை படைத்த பிரித்வி ஷா..!!
ஐபிஎல் வரலாறில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டலஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படிமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக சுப்மன் கில் 38 பந்துகளில் 43 ரன்களிலும் ஆண்ட்ரே ரசல் 28 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து இருந்தனர். அதனைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விளாசினார். டெல்லி அணி பேட்டிங் செய்யும் போது முதல் ஓவரை கொல்கத்தா அணியின் வேக பந்து வீச்சாளர் சிவம் மாவி வீசினர் அவர் வீசிய 6 பந்தையும் பிரித்வி ஷா 6 பவுண்டரிகள் விளாசி ஐபிஎல் வரலாறில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இதற்கு முன்பாக அஜிங்க்கே ரஹானே கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசினார், ஐபிஎல் வரலாற்றில் முதலில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.