தேடி சென்ற பிரித்வி ஷா! பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்ற டெல்லி உரிமையாளர்கள்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காமல் இருந்த நிலையில், டெல்லி உரிமையாளர்கள் அவரை புறக்கணித்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு அதிரடியாக ஒரு காலத்தில் ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால், வாழ்க்கையில் யார் யாருக்கு எப்போது சறுகல் ஏற்படும் என்பதை கணிக்கவே முடியாது. யோசித்து பார்க்க முடியாத சூழ்நிலையில் திடீரென சிலருக்கு சறுகல் ஏற்பட்டுவிடும்.
அப்படி தான் பிரித்வி ஷாவுக்கும் கூட திடீரென கிரிக்கெட் உலகில் சறுகல் ஏற்பட்டது. ஏனென்றால் அவர் தனது உடல் எடை அதிகமான காரணத்தால் அவருக்கு ஆரம்ப காலங்களை போல இப்போது முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் போனது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், பிரித்வி ஷா தனது அடிப்படை விலையான ரூ.75 லட்சத்தில் பங்கேற்றார், ஆனால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இது பிரித்வி ஷா மனநிலையை மிகவும் காயப்படுத்தியது என்று கூட சொல்லலாம். இந்த சூழலில் அவரை ஏலத்தில் எடுக்கமுடியாமல் போனதிற்கு பிறகு அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) உரிமையாளரால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2018 முதல் 2024 வரை 79 போட்டிகளில் விளையாடிய பிரித்வி, 1892 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், கடந்த சீசனில் அவரது பார்ம் மோசமானதாக இருந்த காரணத்தால் அவரை தக்க வைத்துக்கொள்ளாமல் அணி நிர்வாகம் விடுவித்தது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் வருகை தந்தபோது பிரித்வி ஷா டெல்லி உரிமையாளர்கள் கிராந்தி மல்லிகார்ஜுனா மற்றும், பார்த் ஜிண்டால் இருவரும் நடந்து கொண்டு இருந்தார்கள்.
இவர்களை பார்த்தவுடன் பிரித்வி ஷா வேகமாக சென்று அவர்களிடம் பேச முயற்சி செய்தார். இவரை பார்த்தவுடன் டெல்லி உரிமையாளர்கள் கண்டுகொள்ளாதபடி வேகமாக சென்றார்கள். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் அவர் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பதால் அவரை அணி உரிமையாளர்கள் புறக்கணிப்பதாக கூறி வருகிறார்கள்.
Prithvi shaw ignored by DC owners. pic.twitter.com/iaK9pwIQRi
— mufaddla parody (@mufaddl_parody) March 30, 2025