4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர். சற்று முன் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியுடன் காத்திருப்பு பட்டியலில் உள்ள பிரசித் கிருஷ்ணா பயிற்சி மற்றும் பயணம் செய்து வருகிறார். நாளை 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய போட்டியில் பிரசித் கிருஷ்ணா லெவனில் இடம்பெறுவாரா..? என்பது பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…
சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…