638 பந்தில் 404 ரன்… யுவராஜ் சாதனை முறியடித்த பிரகார் சதுர்வேதி..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டுப் போட்டியான கூச் பெஹர் டிராபியின் இறுதிப் போட்டியில், கர்நாடக பேட்ஸ்மேன் பிரகார் சதுர்வேதி இன்று வரலாறு சாதனை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 380 ரன்கள் குவித்தது.  அதில் ஆயுஷ் மஹாத்ரே 145 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம், ஆயுஷ் சச்சின் 73 ரன்கள் குவித்தார். ஹர்திக் ராஜ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவருக்கு இதுதான் வேலை கண்டுக்காதீங்க… அமைச்சர் துரைமுருகன் கடும் விமர்சனம்.!

பொதுவாக நம்மில் பலருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் என்றாலே மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. அவர் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது லாராவின் சாதனையை கர்நாடக வீரர் பிரகார் சதுர்வேதி செய்துள்ளார்.

கர்நாடக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரகார் சதுர்வேதி மும்பை அணிக்கு எதிராக 638 பந்துகளில் 46 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 404* ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் கர்நாடகா அணி 8 விக்கெட்டுக்கு 890 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக கர்நாடகா 510 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

கூச் பேகர் டிராபி தொடரில் 1999-ம் ஆண்டு டிசம்பரில் யுவராஜ் சிங் அடித்த ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது. பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது சாதனையாக இருந்தது. அதன்பிறகு கடந்த  2011-ம் ஆண்டு அசாம் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர் விஜய் ஜோல் 451* ரன்களை அடித்தது யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார். தற்போது கர்நாடக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரகார் சதுர்வேதி இந்த  சாதனையை முறியடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy