உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்!

WorldCup Cricket 2023

ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்றைக்கு 3 அணிகள் மோதுகின்றன. ஐசிசியின் மிகப்பெரிய தொடரான ஒருநாள் உலக்கோப்பை தொடர் அக்.5ம் தேதி தொடங்குகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றனர். இந்தாண்டு உலக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அக்.5ம் தேதி முதல், நவ.19ம் தேதிவரை நடைபெறும் தொடர், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். உலக்கோப்பை தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெறுகிறது. எனவே, தொடர் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதற்காக இந்தியாவிற்கு மற்ற நாட்டு அணிகள் வரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இந்தியாவுக்கு வருகைபுரிந்து தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இன்றைய பயிற்சி ஆட்டங்களில் மொத்தம் 3 அணிகள் மோதுகின்றன.  இதில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பையில் தொடரில் பங்கேற்க இரு நாட்டு அணிகளும் ஹைதரபாத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டனர்.

இதில் குறிப்பாக, 7 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் விளையாடும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவருக்கும் இதுவே முறையாகும். மறுபக்கம், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கடந்த 2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்ற பெருமையை கொண்ட அணியாகும்.

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (c), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம் ஆகியோர் உள்ளனர்.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (c), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங் ஆகியோர் உள்ளனர்.

இதுபோன்று, கவுகாத்தியில் நடைபெறும் மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை அணியும், வங்கதேசம் அணியும் மோதுகின்றன. இதுபோன்று, திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணி மோதுகின்றன. இத்தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கி, அக்.3ம் தேதிவரை இந்தியாவின் கௌகாதி, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய 3 மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும், நாளை இந்தியா – இங்கிலாந்து, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தியில் மோதுகின்றன. இதுபோன்று ஆஸ்திரேலியா – நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியம், திருவனந்தபுரதில் மோதுகின்றன. 50 ஓவர்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டத்தில், அணியில் இடம்பெற்றுள்ள 15 பேரும் மாறி மாறி பேட்டிங், பீல்டிங் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2023 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகள் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது,டாஸ் மதியம் 1.30 மணிக்கு போடப்படும். உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் காணலாம். மொபைல் அல்லது லேப்டாப்பில் பயிற்சிப் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் app அல்லது இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்