இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி ராய்ப்பூர் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மின்கட்டண நிலுவையில் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த மைதானம் பல சர்வதேச போட்டிகளை நடத்தியது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டியை நடத்த உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றும் சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் தற்போது ஒரு தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தற்காலிக மின் இணைப்பு பார்வையாளர்களின் கேலரி மற்றும் பெவிலியன் பெட்டியில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டியின் போது மின்விளக்குகளை ஜெனரேட்டரில் இருந்து இயக்க உள்ளனர்.
இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்கட்டணம் செலுத்தாமல் இரு துறையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறைக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை மின்கட்டண நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. 2018-ம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து 3 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…