ஐபிஎல் விதிகளின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் கொல்கத்தா- பெங்களூர் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
அதைபோல் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அணியின் சி.இ.ஓ. காசி விஷ்வநாதன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில்இது “சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் கோச் லட்சுமிபதி பாலாஜி மற்றும் டிராவல் சப்போர்ட் ஸ்டாஃபின் ஒரு உறுப்பினருக்கும் கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் விதிகளின் படி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…