நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது.
அதற்கு பிறகு களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது, நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை.
14 நாட்கள் தனிமைப்படுத்தலும் ஆட்டத்திற்கு உதவவில்லை. நான் மெதுவாக தொடருக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். அதே போல் பலதரப்பட்ட விஷயங்களையும் நாம் முயற்சிக்க வேண்டி உள்ளது, அதாவது சாம் கரண் அல்லது ரவீந்திர ஜடேஜாவை முன்னால் இறக்கிப் பார்க்க வேண்டி உள்ளது.
மேலும் 217 ரன்கள் விரட்டுவதற்கு ஒரு நல்ல தொடக்கம் வேண்டும் அது எங்களுக்கு நிகழவில்லை. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். மேலும் எங்களது அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் பிழை செய்தனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது கேப்டனும் எம்எஸ் தோனி 7 ஆளாக இறங்கியது, சாம் கரணை முன்னாள் இறங்குவதற்கு முன்பு தோனி முன்னாள் இறங்கிருக்கிருக்க வேண்டும் மிகவும் சிறப்பாக இறங்கியிருந்தால் கண்டிப்பாக அணி வெற்றி பெற வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…