சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது கடவுள் கொடுத்த வரம் ..! பத்திரனா பெருமிதம் ..!
மதீஷா பத்திரனா : இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரூம், சென்னை அணியின் இளம் நட்சத்திர வீரருமான மதீஷா பத்திரனா செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து பவுளரான மதீஷா பத்திரனா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் தொடங்கினார். இதன் காரணமாக அவருக்கு இலங்கை அணியிலும் வாய்ப்புகள் கிடைத்தது, இதனால் தற்போது இலங்கை அணியின் ஒரு நட்சத்திர பவுலராகவே மதீஷா பத்திரனா மாறிவிட்டார் என்றே கூறலாம்.
மேலும், அவர் 2022ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணிக்காக 19 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் இலங்கைக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார். இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதில், இவர் சென்னை அணிக்காக அணியில் தக்கவைக்கப்படுவர் என்று சிஎஸ்கே ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியா-இலங்கை தொடருக்கு முன்னாள் இவர் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “எனது 19 வயதுக்குட்பட்ட விளையாட்டுக்கு பிறகு, நான் இலங்கையில் எந்த அணியிலும் இடமபெறாமல் இருந்தேன். ஆனால் சிஎஸ்கேக்காக நான் அறிமுகமானதிலிருந்து, எனக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது மற்றும் இலங்கையின் முக்கிய அணிக்க்காக முக்கிய வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த வரம் ஆகும். நான் சிஎஸ்கேக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. எம்.எஸ். தோனியுடன் அந்த டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொள்வது என்னைப் போன்ற இளைஞர்களுக்கு குறிப்பாக இலங்கையிலிருந்து வரும் இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது” , என்று மதீஷா பத்திரனா கூறி இருந்தார்.