டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் 5 வீரர்கள்! முதலிடத்தில் இவரா?
டி20I : கிரிக்கெட் போட்டிகள் என்றாலே முதலில் 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் என்று தான் இருந்தது மெதுவாக செல்லும் அந்த போட்டிகளை ரசிகருக்கு மேலும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இந்த 20 ஓவர் போட்டியானது கொண்டு வரப்பட்டது.
டி20 போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்க்கும் தொடர்களான ஐபிஎல், உள்ளூர் தொடர்கள், சுற்றுப்பயணகள் என அதனுடன் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையும் அடங்கும். கடந்த 2007-ம் ஆண்டு இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டது. 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையின் 9-வது டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் வருகிற ஜூன்-1 ம் தேதி தொடங்கவுள்ளது.
எந்த ஒரு ஐசிசியின் முக்கிய தொடர்களிலும் வீரர்கள் புதிய சாதனைகளை செய்வதும் அதனை வேறொரு வீரர் முறியடிப்பது வழக்கமாகவே கொண்டுள்ளது. அதன்படி இந்த டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு பவுலராகவோ இல்லை ஒரு ஆல்-ரவுண்டராகவோ அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலை பற்றி தற்போது பார்ப்போம். இந்த பட்டியலில் முதலிடத்தில் லசித் மலிங்கா, ஸ்டெயின், போன்ற முன்னணி வேக பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்று நாம் எண்ணினால் அது தான் தவறு.
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
- ஷாகிப் அல் ஹசன் – வங்காளதேசம் – 36 போட்டிகளில் 47 விக்கெட்டுகள்.
- ஷாஹித் அப்ரிடி – பாகிஸ்தான் – 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகள்.
- லசித் மலிங்கா – இலங்கை – 31 போட்டிகளில் 38 விக்கெட்டுகள்
- சயீத் அஜ்மல் – பாகிஸ்தான் – 23 போட்டிகளில் 36 விக்கெட்டுகள்
- அஜந்தா மெண்டிஸ் – இலங்கை – 21 போட்டிகளில் 35 விக்கெட்டுகள்
அதிலும் முதலிடத்தில் உள்ள வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். மேலும் நடைபெற இருக்கும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையிலும் இவர் விளையாடவுள்ளார்.
இன்னும் 3 விக்கெட்டுகளை இந்த தொடரில் அவர் கைப்பற்றினார் என்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆல்-ரவுண்டர் வீரர் என ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.