RCB மற்றும் SRH இடையே டிரேடிங் முறையில் வீரர்கள் மாற்றம் ..! யார் யார் தெரியுமா.. ?

ஐபிஎல் 2024க்கான தக்கவைப்பு பட்டியலை வெளியிடும் கடைசி நாளான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ‘டிரேடிங் முறை’ வீரர்களை மாற்றி கொண்டனர். இதில், இரு அணிகளும் தலா ஒரு வீரரை மாற்றிக்கொண்டன. ஷாபாஸ் அகமது பெங்களூர் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வந்துள்ளார். அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் மயங்க் டாகர் பெங்களூர் அணிக்கு வந்துள்ளார்.

ஐபிஎல் 2022க்கு முன் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஷாபாஸ் அகமதுவை ரூ.2.4 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது. ஐபிஎல் 2022ல் ஷாபாஸ் அகமது பந்து மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். பெங்களூர் அணியின் சில வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இதன் அடிப்படையில், அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது. இருப்பினும், ஷாபாஸ் அகமது இந்திய அணியில் நிலையான இடத்தைப் பெற முடியவில்லை. ஐபிஎல் 2023 இல் கூட ஷாபாஸ் அகமது செயல்திறன் குறைவாக இருந்தது.

மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2023க்காக நடைபெற்ற ஏலத்தில் ஆல்ரவுண்டர் மயங்க் டாகரை ரூ.1.8 கோடிக்கு வாங்கியது. மயங்கிற்கு இது ஐபிஎல் முதல் சீசன். இருப்பினும், இந்த சீசனில் அவருக்கு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்