இந்திய கிரிக்கெட் அணி ஆசியகோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் விளையாடியவுள்ளது. வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும்போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில், போட்டியில் விளையாட இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்களுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் போது, ஸ்வீப் ஷாட்டை ஆடுவதில்லை என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் இதுவரை பார்த்ததில் விராட் கோலி அதிகமாக மிட்-விக்கெட் பகுதியை குறிவைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் சில சமயங்களில் பெரிய ஷாட்கள் மற்றும் ஸ்வீப் விளையாடுவதை நாங்கள் பார்த்தோம்.
ஆனால், விராட் ஸ்வீப் ஷாட்டை அடிக்கடி ஆடமாட்டார் என்பது எனக்கு மட்டுமில்லை அது அனைவருக்கும் தெரியும். அவர் எப்போதாவது தான் ஸ்வீப் ஷாட்டை அடிக்கிறார். முன்பெல்லாம் அடிக்கடி அடித்து சில சமயங்களில் அவுட் ஆகி விடுகிறார். ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை சமீபகாலமாக தனது கால்களை நன்றாகப் பயன்படுத்தி பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுகிறார்.
நிதானமாக விளையாடி அதிக நேரம் களத்தில் நின்றுகொண்டு எந்த பந்துகளை எப்படி அடிக்கவேண்டும் என அருமையாக விளையாடி வருகிறார். அவரது ஷாட் மேக்கிங் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறது” என விராட்கோலியின் பேட்டிங் பற்றி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் இன்று ஒன்றாக பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முன்கூட்டியே வெளியேறினால், அந்த இருவரும் கிரீஸில் இருப்பார்கள். விராட் கோலி நம்பர் 4-லில் களமிறங்க தான் அதிக வாய்ப்புகள் உள்ளது” எனவும் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…