ஷாஹீன் அபிரிடிக்கு எதிராக பயப்படாமல் அதிரடியாக விளையாடுங்கள் – கம்பிர்

Default Image

பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடிக்கு பயப்படாமல் துணிந்து விளையாடுங்கள் என்று கம்பிர், இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 இல் விளையாடுகிறது, இதற்கு முன்னதாக இந்திய பேட்டர்களுக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கவுதம் கம்பிர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா, உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் , விராட் கோலி போன்றோர்கள் பாகிஸ்தானின் ஷாஹீன் அபிரிடிக்கு எதிராக ரன்கள் குவிப்பதை நோக்கமாகக்கொள்ள வேண்டும், மாறாக ஷாஹீன் அபிரிடியைப் பார்த்து பயப்படக்கூடாது என்று கம்பிர் கூறியுள்ளார்.

கடந்த முறை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்ததற்கு ஷாஹீன் அப்ரிடி தான் முக்கிய காரணமாகஇருந்தார். இந்தியாவின் ஒபனர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் கோலியின் விக்கெட்களை ஷாஹீன் அப்ரிடி எடுத்து இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார்.

இந்த முறை அப்ரிடி, காயத்திற்கு பிறகு களமிறங்கும் மிகப்பெரிய தொடர் இது என்பதால் அவருக்கு எதிராக இந்திய அணி ரன்கள் குவிக்க வேண்டும், அவருக்கு எதிராக இந்திய அணி டிஃபென்ஸ் ஆட பார்த்தால் அது ஆபத்தில் முடியும். டி-20 யைப்பொறுத்தவரை நீங்கள் அடித்து ஆடுவதற்கு தான் முயற்சிக்க வேண்டும், டிஃபென்ஸ் ஆடுவது பலனளிக்காது என்று கம்பிர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியுற்ற பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் இருமுறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை இந்தியாவும் ஒருமுறை பாகிஸ்தானும் வென்றுள்ளது. அதற்கு பிறகு இரு அணிகளும் டி-20 உலகக்கோப்பையில் அக்-23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாட இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்