#IPL2022: ஓடன் ஸ்மித் காட்டடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
15-வது ஐபிஎல் திருவிழாவின் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, அதிரடியாக ஆடி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த நிலையில், அணியின் ஸ்கொர் மலமலவென உயர்ந்தது. சிறப்பாக ஆடிய மயங்க அகர்வால் 32 ரன்கள் அடித்து வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய ராஜபக்சா, தவானுடன் இணைந்து அதிரடியாக ஆடினார்.
இதில் 43 ரன்கள் எடுத்து தவான் வெளியேற, அவரையடுத்து சிறப்பாக ஆடிவந்த ராஜபக்சா, 43 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து ஷாருக்கான் – ஓடன் ஸ்மித் கூட்டணி களமிறங்க, ஓடன் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி, 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக அமைந்த நிலையில், பஞ்சாப் அணியின் ஷாருக் கான் மற்றும் ஓடன் ஸ்மித்தின் தீவிர முயற்சியால் வெற்றிபெற்றுள்ளது.