சிராஜ் ஒழுங்கா பந்துவீசலனா அவரை தேர்ந்தெடுங்க! ரோஹித் ஷர்மாவுக்கு அட்வைஸ் கொடுத்த சபா கரீம்!

rohit Saba Karim

ஆசியகோப்பை 2023 இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், இதில் விளையாடும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று இருந்தார். ஒரு தரப்பு அவரை அணியில் சேர்த்து தவறு என்றும் மற்றோரு தரப்பில் அவர் அணியில் இருப்பது நல்லது எனவும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் சமீபத்திய பேட்டி ஒன்றில் 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்து இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும் என  கூறியுள்ளார்.

சிராஜுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா

இது குறித்து பேசிய சபா கரீம் ” பிரசித் இப்போது மிகவும் வலுவான வேகப்பந்து வீச்சாளர். அவர் இந்திய அணியில் ஆசிய கோப்பையில் விளையாடினாள் ரோஹித் ஷர்மாவுக்கு பல வாய்ப்புகளைத் திறக்கும். அவர் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று விரும்பினால் அவர் முகமது சிராஜை மூன்றாவது சேர்த்துக்கொள்ளலாம். சிராஜ் நன்றாகப் பந்துவீசவில்லை என்றால், நீங்கள் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்து விளையாட வைக்கலாம்.

பிரசித் கிருஷ்ணா இருப்பது நல்லது

நம்மளிடம் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர் எந்த அளவிற்கு சிறப்பாக விக்கெட் எடுக்கமுடியும் என்பது நமக்கு தெரியும். ஆனால், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற ஒருவர் இருந்தால் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா எந்த அளவிற்கு அருமையாக பந்துவீசுவார்களோ அதே அளவிற்கு அவர்களாலும் பந்துவீச முடியும். என்னை பொறுத்தவரை அணியில் பிரசித் இருப்பது நல்லது.

முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் 

பிரசித் கிருஷ்ணா இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ரோஹித் ஷர்மா அவரை சரியாக பயன்படுத்தவேண்டும். நான் முதலில் சொன்னது தான் சிராஜ் ஒருவேளை நன்றாக விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டும் ” என சபா கரீம்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்