Petrol Diesel Price[ file image]
Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் – 13, 2024 அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல், 100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் இன்று (24-03-2024) அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகராமான டெல்லியில் இன்று (24-03-2024) லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…