ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங்கை மீண்டும் அணிக்கு அழைக்கிறது கிரிக்கெட் அசோசியேஷன்.!

பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் யுவராஜ் சிங்கை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்தவர் யுவராஜ் சிங்.
இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
தற்போது, பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் அவரை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, பஞ்சாப் மாநில அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கையில், ‘ சில நாட்களுக்கு முன்னர் யுவராஜ் சிங்கிற்கு PCA சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் அணிக்கு கிரிக்கெட் வீரராகவும், ஆலோசகராகவும் வர வேண்டும்.’ என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து யுவராஜ் சிங் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025