#PBKSvRR: பஞ்சாப் பவுலரை பதம்பார்த்த ராஜஸ்தான்…வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு!

Default Image

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் 185 ரன்களை குவித்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. லூயிஸ் 36 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேற, நிதானமாக விளையாடி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இவர்களை தொடர்ந்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் அடித்த நிலையில், மஹிபால் லோமோர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் அவுட்டானார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்துள்ளது. இதனால் பஞ்சாப் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 5, முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ராஜஸ்தான் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்ததால் ஒரு கட்டத்தில் 200 ரன்களை சுலபமாக கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பஞ்சாப் அணி இறுதி ஓவர்களை சிறப்பாக வீசி ரன்களை கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்